55 ஆண்டுகளுக்கு முன் கடலில் விழுந்த விமானம்.. கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்!

Home > News Shots > தமிழ் news
By |

55 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான போர் விமானத்தின் பாகங்களை தற்போது கண்டுபிடித்து இளைஞர்கள் சிலர் அசத்தியுள்ளனர்.

சென்னை  நீலாங்கரை கடல் பகுதியில் கடந்த 1963 -ஆம் ஆண்டு சிறிய ரக போர்விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனை தேடும் பணியில் கடந்த 2007 -ஆம் ஆண்டு ஆழ்கடல் நீர்மூழ்கி பயிற்சியாளரான அரவிந்த் என்பவர் ஈடுபட்டார். இவர், புதுவையில் சுமார் 25,000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆழ்கடல் நீர்மூழ்கி பயிற்சி அளித்து வருகிறார். இந்த விமானத்தை தேடும் பணியில் சந்துரு, அருண், திமோத் ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலில் புதைந்து கிடந்த விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இதனை கடலுக்கு அடியிலேயே வீடியோ எடுத்து அதை அரசிடம் சமர்பித்துள்ளனர். தன்னுடைய விடாமுயற்சியால் 55 ஆண்டுகளுக்கு பிறகு போர் விமானத்தின் பாகங்களை அரவிந்த் தனது குழுவுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து பகிர்ந்து கொண்ட அவர், ஆழ்கடலில் நீந்தி விமான பாகங்களை கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயமாக இருந்ததாகவும், கடலில் மூழ்கிய கப்பல்கள், போர் விமானங்களை கண்டுபிடிக்க அரசுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

CHENNAI, FLIGHT, ACCIDENT

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES