அமேசான் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு 'அமேசான்  ப்ரைம்' என்னும் சேவையை வழங்கி வருகிறது.அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பயனாளர்களுக்கு 'பிளிப்கார்ட் பிளஸ்' என்னும் சேவையை வருகிற ஆகஸ்ட் 15 முதல் வழங்க உள்ளது.

 

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த சேவை மூலம் நாடு முழுவதும் பல பயனாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்க இருக்கின்றது. இதன் முக்கிய அம்சமாக இருப்பது இலவச மற்றும் அதிவேகமாகபொருட்களை பயனாளர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது ஆகும்.

 

அமேசான் நிறுவனத்தின்  ப்ரைம் சேவையை பயன்படுத்த வேண்டுமெனில், வருடத்திற்கு  999 ரூபாயை சந்தாவாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். ஆனால் பிளிப்கார்ட் தனது பயனாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக  இந்த சேவையை வழங்குகிறது.

 

இதுகுறித்து பிளிப்கார்ட்டின் தலைமைசெயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமுர்த்தி கூறியதாவது, "நாங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளையும் அவர்களது விருப்பங்களையும் தெளிவாக அறிந்து வைத்துளோம்.இந்த புதிய வசதியானது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இதை நாங்கள் ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்யவுள்ளோம்,'' என தெரிவித்தார்.

 

அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளது. அமேசான் மூலம்  இந்தியாவில் செய்யப்படும் ஆர்டர்களில் 30% அமேசான் ப்ரைம் மூலமாகவே ஆர்டர் செய்யப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

BY JENO | AUG 1, 2018 4:33 PM #AMAZON #FLIPKART #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS