‘தோனியையும் கோலியையும் ஓரங்கட்டி, இந்திய அணியின் கேப்டன் புதிய சாதனை!’

Home > தமிழ் news
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆடவர் பிரிவில் தோனி மற்றும் கோலி இருவரின் கேப்டன்ஷிப்பில் நடந்த சாதனைகளை இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலிராஜ் முறியடித்துள்ளார்.

இந்திய ஆடவர் அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட  தொடரில் 3-ல் விளையாடி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதேபோல் இந்திய மகளிர் அணியும் நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முன்னதாக நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று ஓவல் மைதானத்தில் நடந்த நியூஸிலாந்திற்கு எதிரான 2 -ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூஸிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனைதொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி சாதனையை நிகழ்த்தியது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலிராஜ் மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்து சேஸிங் செய்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வரிசையில் தோனி 103.07 சராசரி புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 96.23 சராசரி புள்ளிகளுடன் கோலி அதற்கு அடுத்த இடத்திலும் இருந்தனர்.

தற்போது நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2 -ஆவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம் மிதாலிராஜ் 111.29 சராசரி புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

MSDHONI, VIRATKOHLI, MITHALI RAJ, NZVIND, TEAMINDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS