‘வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜர்’ -ஐ ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறதா பேஸ்புக்?

Home > தமிழ் news
By |

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜர் ஆகியவற்றை ஒன்றாக இணைத்தவாறு சாட் செய்யும் வசதியை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ள பேஸ்புக் நிறுவனம் பல புதிய அப்டேட்டுகளை அடிக்கடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாட்ஸ் ஆப் மூலம் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

அதன்படி, உலகளவில் ஒரு செய்தியை ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என்றும், ஆனால் இந்தியாவில்  5 பேருக்கு மட்டும்தான் ஒரே நேரத்தில் தகவல் அனுப்ப முடியும் என்றும் இருந்தது. இதனையடுத்து உலக அளவிலும் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்கிற விதியை அறிவித்தது வாட்ஸ் ஆப்.

இதனைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜர் ஆகியவற்றை பேஸ்புக்குடன் இணைத்து சாட் செய்யக் கூடிய புதிய வசதியை  தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகவும், வேகமாகவும், பாதுகாப்பகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம் தனிமனித தரவு விபரங்கள் மீதான பாதுகாப்புத்தன்மை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் எந்தளவுக்கு இருக்கும் என்பது தற்போது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இதுகுறித்து பேஸ்புக் அதிபர் ஸக்கர்பர்க்கின் தலைமையில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FACEBOOK, WHATSAPP, MESSENGER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS