‘ட்ரீட்மென்ட்டுக்கு நல்ல பாம்புடன் வந்த விவசாயியின் அதிரவைத்த புத்திசாலித்தனம்!

Home > தமிழ் news
By |

தன்னைக் கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியன்குப்பத்தில் ரங்கநாதன் என்கிற முதியவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல தன்னுடைய விளைநிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென ஒரு நல்லபாம்பு ரங்கநாதனின் காலில் கடித்துள்ளது.

ஆனால் பாம்பு கடித்த வலியை தாங்கிக்கொண்டு, அந்த முதியவர் உடனே ஒரு நெகிழிப் பையில் தன்னைக் கடித்த நல்லபாம்பை பிடித்துள்ளார். பின்னர் அந்த பாம்பு பையை தன் கையில் எடுத்துக் கொண்டே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், நெகிழிப் பையில் இரண்டு அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வந்து விசாரித்ததில், விவசாயி ரெங்கநாதன் தன்னை கடித்த நல்லபாம்பை கூடவே கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாம்பின் விஷத்தன்மையை அறிந்து விவசாயி ரங்கநாதனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

அதன்பிறகு அந்த நல்லபாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் மருத்துவமனை ஊழியர்கள் விட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின் விவசாயி ரங்கநாதன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FARMER, SNAKE, HOSPITAL, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS