'நீ ஏமாற்றுக்காரன்'...இந்திய வீரரை நோக்கி கத்திய ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ!
Home > தமிழ் newsதான் அவுட்டாகி விட்டேன் என தெரிந்தும் புஜாரா வெளியேறாமல் இருந்தது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பெங்களூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் கர்நாடகா – சவுராஸ்திரா அணிகள் மோதின.இதில் சவுராஸ்திரா அணிக்காக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் புஜாரா விளையாடினார்.முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 275 ரன்கள் எடுத்தது.பின்பு களமிறங்கிய சவுராஸ்திரா அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிய கர்நாடகா, 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனிடையே 279 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஸ்திரா, 91.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.இதன் இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடி கொண்டிருந்த புஜாரா,வினய் குமார் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை.புஜாராவும் அதனை கண்டுகொள்ளாமல் கிரீஸை விட்டு நகராமல் நின்றார்.
ரீப்ளேயில் பார்த்த போது பந்து புஜாராவின் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.ஆனால் புஜாரா அவுட் என தெரிந்தும் வெளியேறாமல் இருந்தது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்தது.இதனால், புஜாராவை நோக்கி ஏமாற்றுகாரர் என ரசிகர்கள் கத்த தொடங்கினார்கள்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- This Chennai Super Kings player suspended from bowling in international cricket
- Hardik Pandya in, MS Dhoni out! Here's reason why
- This New Zealand cricketer retires at age 68
- New Zealand police has a hilarious warning about Team India for public
- 'இது என்ன மின்னல விட வேகமாக இருக்கு'...ஸ்டம்பிங்கில் தெறிக்க விட்ட தல...பட்டையை கிளப்பும் வீடியோ!
- கோலியா? அவர சமாளிக்க தனி பிளான் வெச்சிருக்கோம்.. கிரிக்கெட் வீரர் பகீர்!
- "Because I love you": Virat Kohli and Kevin Pietersen involve in hilarious Twitter exchange
- ''தல தோனி'' 4-வது ஆர்டரில் இறங்கும் ரகசியம் இதுதான்...மனம் திறந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'இறுதியா இடம் கிடைச்சாச்சு'...இந்திய அணியில் இணையும் ஆல்ரவுண்டர்!
- 'ராகுல், ஹா்திக் பாண்டியா விவகாரத்தில் அதிரடி திருப்பம்'...முக்கிய முடிவினை வெளியிட்ட பிசிசிஐ!