மக்களின் பயணத் தேவையை  பூர்த்தி செய்வதில் ரயில்வே துறை முன்னணியில் இருக்கின்றது. இது நிர்வாக காரணங்களுக்காகவும் மக்களின் தேவையை பொறுத்தும் அவ்வப்போது ரயில்களின் நேரத்தை தென்னக ரயில்வே மாற்றி அமைக்கும்.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில், நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 7.15-க்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்,  5 நிமிடங்கள் முன்னதாக இயக்கப்பட உள்ளது. வழக்கமாக இரவு 9 மணி 5 நிமிடங்களுக்கு இயக்கப்படும் மேட்டுப்பாளையம் புளூமவுண்டன் எக்ஸ்பிரஸ், 10 நிமிடம் முன்னதாக புறப்படும்.

 

காலை 8.30 மணிக்கு எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் ரயில், அரை மணி நேரம் முன்னதாக இயக்கப்படும். மாலை 4 மணி 5 நிமிடங்களுக்கு புறப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், 5 நிமிடம் முன்னதாக 4 மணிக்கே இயக்கப்படும்.

 

8.20 மணிக்கு இயக்கப்பட்டு வந்த செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், 20 நிமிடம் தாமதமாக 8.40 மணிக்கு புறப்படும். இரவு 9 மணி 5 நிமிடங்களுக்கு புறப்படும் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், 5 நிமிடம் முன்னதாக 9 மணிக்கே இயக்கப்படும்.இரவு 10 மணி 5 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த காரைக்கால் கம்பன் ரயில்,  நாளை முதல் 10 மணிக்கே இயக்கப்படும்.

 

இரவு 10.30 மணிக்கு புறப்படும் தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ், 10 நிமிடம் தாமதமாக 10.40க்கு புறப்படும். இரவு 10.40க்கு புறப்படும் மதுரை மகால் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 11.50க்கு புறப்பட உள்ளது.தாம்பரம் - செங்கோட்டை இடையே தினசரி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தாம்பரத்தில் காலை 7 மணிக்கு  புறப்படும் இந்த ரயில் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலையில் 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY JENO | AUG 14, 2018 12:48 PM #TRAIN #SOUTHERN RAILWAY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS