‘ஜெயிக்கணும்னா இந்த முடிவ நான் எடுத்தே ஆகணும்’, அதிரடி காட்டிய கேப்டன்!

Home > தமிழ் news
By |

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் ஒரு அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி நடந்து முடிந்த 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றி அபார வெற்றியை பெற்றது. இதனை அடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா விளையாடுகிறது.

இதன் முதல் டி20 போட்டி வில்லிங்டானில் உள்ள நெஸ்ட்பேக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த 3 டி20  போட்டிகளில் இருந்தும் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரோகித ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்திவருகிறார். 

இதில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் இல்லாததால் அந்த இடத்தில் இறங்கும் வீரர் குறித்து முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், ‘குப்தில் இடத்தில் இறங்கும் வீரர் குறித்து முடிவாகவில்லை, அந்த இடத்தில் திறமையான வீரர்கள் விளையாடவுள்ளனர், அதனால் அதற்கேற்றவாறு அணியின் பேட்டிங் மாற்றப்படும், தொடக்க ஆட்டக்காரராக நான் கூட இறங்க வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.

இதனையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கொலின் முன்ரோ மற்றும் டிம் செயிஃபெர்ட் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேலும் அதிரடியாக விளையாடிய நியூஸிலாந்தின் அறிமுக வீரர் டிம் செயிஃபெர்ட்  43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். மேலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 220 அடித்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

TEAMINDIA, NZVSIND, ICC, BCCI, T20, ROHITSHARMA, KANEWILLIAMSON

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS