எப்படி எல்லாம் ஆஃபர் கொடுக்குறாங்க...'குப்பையை கொடுத்தால் பீர் இலவசம்' !

Home > தமிழ் news
By |

இளைஞர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கோவா சென்று விட வேண்டும் என பிளான் போடுவார்கள்.ஆனால் பலரது பிளான் நடைமுறைக்கு வராமல் அப்படியே கிடப்பில் இருக்கும்.இளைஞர்களின் கனவு தேசம் என அழைக்கப்படும் கோவாவில் தான் தற்போது புதிதாக ஒரு ஆஃபரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

கோவாவில் கடற்கரையில் கிடக்கும் சிகரெட் துண்டுகள், பாட்டில் மூடிகளைக் சேகரித்துக் கொடுத்தால் அதற்கு பதிலாக பீர் வழங்கப்படும் என்பதே அந்த ஆஃபர்.உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு மக்களிடமும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவாவிற்கு,வருடம் முழுவதும் ஏராளமான மக்கள் சுற்றுலாவிற்காக வருகிறார்கள்.இதனால் கடற்கரைப் பகுதி அதிகமாக மாசுபடுவதாக அம்மாநில அரசு கருதியுள்ளது. எனவே, சுற்றுலாப் பகுதிகளைச் சுத்தமாகப் பராமாரிக்க திரிஸ்டி மரேன் என்ற அமைப்பும் மாநில சுற்றுலா அமைச்சகமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி 10 பீர் பாட்டில் மூடிகள் அல்லது 20 புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளைக் கொடுத்தால்  இலவசமாக பீர் வழங்கப்படும். ஜனவரி 30-ம் தேதி பாகா கடற்கரை பகுதியிலுள்ள சான்சிபாரில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.பீர் பாட்டில் மூடிகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைக் கொடுத்து கூட பீர் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் வேஸ்ட் பார்ஸ் என்றழைக்கப்படும் இந்த பார்கள் நிறைய தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIGARETTE, BUTTS, BOTTLE CAPS, GOA, BEER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS