முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!
Home > தமிழ் newsதிமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வயது 58 ஆகும். இவர், திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர்.
கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தபோதும், கருணாநிதியும், பரிதி இளம்வழுதியும் மட்டுமே வெற்றி பெற்றனர்.ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர்.
2006 11ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். அதற்கு முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்தார்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு திமுகவில் இருந்த விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சசிகலா - ஓ.பன்னீர் செல்வத்தின் பிரிவின்போது, ஓ.பி.எஸ் அணியின் பக்கம் சென்றார் பரிதி.
சமீபத்தில் டிடிவி தினகரனுடன் இணைந்தார். இதற்கிடையே, இன்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காததின் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'கேஸ் இன்னும் முடியல, தொடர்ந்து எழுதுவேன்': அன்றுமுதல் இன்றுவரை 'நக்கீரன்' கோபால்!
- 'தீபாவளி சிறப்பு பேருந்துகள்'..முன்பதிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் உள்ளே!
- Koyambedu Bus Terminus officially renamed
- 'கோயம்பேடு பேருந்து' நிலையத்திற்கு பெயர் மாற்றம்.. முன்னாள் முதல்வரின் பெயர் சூட்டப்பட்டது!
- சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழும்புகிறது: மு.க.ஸ்டாலின்!
- ‘இவங்கெல்லாம்தான் சிசிடிவி-யை நிறுத்த சொன்னாங்க’:ஜெ., மரணத்தில் திருப்பம்!
- "Panneerselvam Was Ready To Ditch EPS & Join Me," Claims TTV Dhinakaran
- முதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்!
- கருணாநிதியின் சொத்து விவரங்களை மு.க.ஸ்டாலின் வெளிவிடுவாரா? அமைச்சர்!
- நிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து!