இந்தியா-இங்கிலாந்து  இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்டமுடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் நிலைத்து நின்ற கேப்டன் கோலி(103) ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 23-வது சதத்தினைப் பதிவு செய்தார்.

 

தொடர்ந்து புஜாரா(72) ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை எடுத்துள்ளது. தற்போது ரஹானே,ஹர்திக் இருவரும் களத்தில் நிற்கின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS