'தீபாவளி' ரேஸிலிருந்து விலகியது இந்தப்படமா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Home > தமிழ் news
By |
'தீபாவளி' ரேஸிலிருந்து விலகியது இந்தப்படமா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நவம்பர் 6-ம் தேதி வருகிறது. புத்தாடை, பட்டாசு, இனிப்புகளுடன் தீபாவளியைக் கொண்டாடினாலும் தங்கள் மனதுக்குப் பிடித்த நடிகரின் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பது ரசிகர்களுக்குப் பிடித்தமான விஷயம்.

 

இதனையொட்டி தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்தவகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு தளபதி விஜய்யின் சர்கார், ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மற்றும் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தநிலையில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகியதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சர்கார், பில்லா பாண்டி, திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவது தற்போது உறுதியாகியுள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS