லீவு கொடுக்காததால் குடும்பத்துடன் ஆம்புலன்ஸில் ஆபிஸ் வந்த ஊழியர்!

Home > தமிழ் news
By |

ஈரோட்டில் சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட பாபு என்பவர், தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது அலுவலகத்தில் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய பாபுவின் மனைவியின் கோரிக்கையை கிளை மேலாளர் எடுத்துக்கொள்ளாமல், விடுப்பு அளிக்க மறுத்துள்ளார். மேலும் 70 நாட்கள் விடுமுறை போட்டதால் பாபுவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.


காரணம் பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததை  அவர் நம்ப மறுத்திருக்கலாம் என்பதை யூகித்த பாபு தனக்கு விடுமுறை அளிக்காததால், என்ன செய்வது என்று தெரியாமல், தனது மனைவி அன்னக்கொடியுடனும் 5 வயது மகன் ஹரியுடனும் மற்றும் 7 வயது மகள் நேகரிகாவுடனும் ஆம்புலன்ஸில் ஈரோட்டு போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்குள் வந்து நிரூபித்திருக்கிறார்.


இதனை அடுத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் பொது நிர்வாகிகளால் இந்த பிரச்சனை பேசித்தீர்க்கப்பட்டு, பாபுவை மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர். என்னதான் பாபு விடுமுறை கேட்டிருந்தாலும், போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் இருவர் 70 நாட்கள் விடுமுறை எடுப்பின் அந்த பணி பாதிக்கப்படலாம் என்கிற நோக்கில் கிளை மேலாளர் சுப்ரமணியன் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

EMPLOYEE, TRANSPORT, ERODE, TAMILNADU, LEAVE, HOLIDAY, MEDICALLEAVE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS