காங்கிரஸ் முதல் மோடி வரை: அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் ஜனதா தளத்தில் இணைந்தார்!
Home > தமிழ் newsஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அக்கட்சியின் தலைவர் பொறுப்புக்கு அடுத்த நேரடி பொறுப்புகளை கவனிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் பொதுவெளியில் பலராலும் அறியப்பட்டவரல்ல என்றாலும், அரசியல் உலகில் அவருக்கு அறிமுகமே தேவையில்லை. கூர்மையான அரசியல் நகர்வுகளை கவனித்து கருத்து கூறி வந்த பிரசாந்த் சமூக வலைதளம் மூலம் அடையாளம் காணப்பட்டவர். 2014 மக்களவை தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சார ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், மோடி பிரதமரான பின்னர் பிரபலம் அடைந்தார்.
அதன் பின்னர் பல்வேறு கட்டங்களில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளுக்கும் ஆலோசகராக இருந்தவர். இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோருக்கு தனது கட்சியின் துணைத்தலைவராக பொறுப்பளித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் மக்கள் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி இந்த தகவல்களை உறுதிப்படுத்தியதோடு, வரவிருக்கும் தேர்தலில் தங்கள் கட்சி பெருவாரியான மக்களிடன் சென்றடைந்து வெற்றிக்கு அமோக வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த 31 வங்கதேச மக்கள் ரயில்நிலையத்தில் கைது!
- Uniform Smart Driving Licenses Across India To Be A Reality From 2019; Here's All You Need To Know
- வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை, வீட்டுக்கு அழைத்துச்சென்று இளைஞர்கள் கொடூரம்!
- Prime Minister Narendra Modi Is Lord Vishnu's Incarnation, Says BJP Spokesperson
- மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!
- தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!
- சபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்!
- 'Floccinaucinihilipilification': Shashi Tharoor's 29-Letter Word To Describe His New Book On PM Modi
- டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!
- வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!