வாத்துகள் நீந்துவதால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது என, திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

 

திரிபுரா மாநில முதல்வராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற பிப்லப் குமார் தேப் மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது என, கருத்து கூறி சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் இந்திய அழகைப் பிரதிபலிக்கிறார். சிவில் என்ஜினீயர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் போன்ற கருத்துக்களை தெரிவித்து மீண்டும்,மீண்டும் சர்ச்சைக்குள்ளானார்.

 

இந்தநிலையில் வாத்துகள் தண்ணீரில் நீந்துவதால் தான் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது, என பொதுவிழா ஒன்றில் பேசியிருக்கிறார்.

 

சமீபத்தில் ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை பிப்லாப் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது'', என பேசினார்.

 

எந்தவிதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது சரியில்லை என,அம்மாநில கட்சிகள் இக்கருத்தினை விமர்சனம் செய்துள்ளன.

 

BY MANJULA | AUG 28, 2018 4:48 PM #BJP #TRIPURA #DUCKS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS