குடிபோதையில் பெற்ற மகள்களை கொன்றுவிட்டு தப்பியோடிய தந்தை!

Home > தமிழ் news
By |

கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பத்மநாபன் என்பவர், தனது மனைவி செல்வராணி, மகள்கள் ஹேமவர்ஷினி மற்றும் ஸ்ரீஜா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பாக, செல்வராணிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் பத்மநாபனின் தாயார் பிரேமா, தன் பொறுப்பில் கவனித்து வந்திருக்கிறார்.


இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து பத்மநாபன், தன் மனைவி செல்வராணியுடன் தகராறு செய்துள்ளார்.  பொறுத்திருந்து பார்த்த செல்வராணி, பதம்நாபனின் எல்லைமீறிய நடவடிக்கைகள் காரணமாக போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசாரோ கணவன் - மனைவி இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.


ஆனாலும் பத்மநாபனின் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத செல்வராணி கணவரிடம் இருந்தும், மகள்களிடம் இருந்தும் பிரிந்து தன் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். மகள்கள் இருவரும் வீட்டில், தங்கள் அப்பா பத்மநாபனுடன் இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த 2 பெண் பிள்ளைகளும் திடீரென வீட்டுக்குள் சடலமாக கிடந்ததைப் பார்த்து பத்மநாபனின் தாயார் பிரேமா பீறிட்டு அழுதுள்ளார்.


இறுதியில் மனைவி மீது இருக்கும் கோபத்தினால் குடிபோதையில், பத்மநாபன் தான் பெற்ற மகள்களையே தலையணை கொண்டு அழுத்தி, கொன்றதாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, தலைமறைவான பத்மநாபனை போலீசார் தேடி வருகின்றனர்.

CRIME, TAMILNADU, MURDER, DRUNK, MAN, DAUGHTERS, WIFE, HUSBAND

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS