'இவர் அடுத்த சச்சினா'?...கடுப்பான கபில்தேவ்!

Home > தமிழ் news
By |

'யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்',அது அந்த வீரர்களின் இயல்பான ஆட்டத்தை பாதிக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 'பிருத்வி ஷாவை'அடுத்த சச்சின் என கிரிக்கெட் ஆர்வலர்கள் உட்பட பலர் தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ் "கிரிக்கெட்டை பொறுத்தவரை நாம் யாரையும் யாருடனும் ஒப்பிட கூடாது.அனைத்து வீரர்களுக்கும் தனிதிறன் என்று ஒன்று இருக்கும்.நாம் இவ்வாறு ஒப்பிடும் போது அது அந்த வீரர்களின் இயல்பான ஆட்டத்தை பாதிக்கும்.மேலும் பிருத்வி ஷாவை சச்சினோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்.அது அவரது இயல்பான ஆட்டத்தை பாதிக்கும்என சற்று கடுமையாக தெரிவித்தார்.

 

மேலும் 'யோ யோ’உடற்தகுதித் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த கபில் தேவ் 'கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் முக்கியம், ஆனால், யோ யோ மட்டுமே அளவு கோல் இல்லை’ மன ரீதியாக வீரர்கள் தங்கள் பிட்னஸை வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். கிரிக்கெட் பிட்னஸ் என்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது.

 

அது யோ யோ தகுதி தேர்வை விட வித்தியாசமானது. நல்ல தடகள வீரராக இல்லாமல் இருந்தாலும் கிரிக்கெட் அறிவு இருந்தால் போதும். சவுரவ் கங்குலியும் சிறந்த அத்லெட் கிடையாது. ஆனால், அவர் சிறந்த கேப்டனாக இருந்தார்’ என்று கூறினார்.

 

இந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு வீரர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டும் தான் வீரர்கள் அணியில் விளையாட முடியும்.இதில் தேர்வு பெற முடியாமல் பல வீரர்கள் அணியில் இடம் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் இந்த யோ - யோ தகுதி தேர்வு, சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

CRICKET, BCCI, SACHIN TENDULKAR, PRITHVI SHAW, KAPIL DEV

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS