அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பதவி பறிக்கப்பட்டால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும் இதனால் அமரிக்கர்கள் அனைவரும் ஏழையாகிவிடுவார்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக  கூறியுள்ளார்.

 

ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்யிடம் "உங்களது பதவி பறிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்து பேசிய அவர் "எனது பதவி பறிக்கப்பட்டால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும், பங்குச் சந்தைகள் சின்னா பின்னமாகும் இதனால் அமெரிக்கர்கள் அனைவரும் ஏழைகளாக மாறுவார்கள் என கடுமையாக பதில் அளித்தார்.

 

ட்ரம்ப் மீது தொடந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் கூறியுள்ளார். முன்னதாக, ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், ட்ரம்பை அமெரிக்க பொருளாதார சட்டங்களை மீற,தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்ததும் சர்ச்சைய ஏற்படுத்தியது.

 

மேலும் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், தனது ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் எல்லாம், ஹிலாரி கிளின்டன் ஆட்சிக்கு வந்திருந்தால் படு மோசமான நிலைக்கு சென்றிருக்கும் என்றார்.

 

மேலும் இவ்வளவு சாதனைகளை செய்துள்ள என்னை எப்படி பதவியில் இருந்து நீக்குவீர்கள் என மிக கடுமையாக பதில் அளித்தார்.

BY JENO | AUG 24, 2018 11:21 AM #DONALD TRUMP #UNITED STATES #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS