பிறரின் மனைவி உயிருடன் இருப்பதாக, பேஸ்புக் மூலம் 7 மாதம் ஏமாற்றிய ‘த்ரில்லிங்’ நபர்!

Home > தமிழ் news
By |

கடந்த ஜூன் மாதம், தனது தங்கை ராஜேஸ்வரியை காணவில்லை என்றும், அதற்குக் காரணம் அவரது இரண்டாவது கணவரான பீகாரைச் சேர்ந்த மணிஷ் சின்ஹாதான் என்றும் ராஜேஸ்வரியின் சகோதரர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் ராஜேஸ்வரியின் இரண்டாவது கணவர் மணிஷ் உட்பட பலரையும் துருவித் துருவி விசாரித்துள்ளனர். 


அப்போது மணிஷ் கூறிய வாக்குமூலத்தின்படி, அவரும் அவரது மனைவியும் நேபாளத்தின் போக்ரா மலைக்குன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அங்கு நடந்த வாக்குவாதம் காரணமாக, ராஜேஸ்வரி திரும்பிவர மறுத்ததை அடுத்து, கோபத்தில் மனைவியை விட்டுவிட்டு மணிஷ் மட்டும் வீடு திரும்பியிருக்கிறார். இந்த விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் குழம்பிக்கொண்டிருந்த சமயம்தான், ராஜேஸ்வரியின் செல்போன் ஆன் ஆகியுள்ளது. அதை வைத்து போலீஸார் முகவரியை தேடி கண்டுபிடித்தபோதுதான் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்களாக ராஜேஸ்வரி கொல்லப்பட்டுள்ளதும், அவரைக் கொன்றது மணிஷ் இல்லை டாக்டர் தர்மேந்திர பிரதாப் என்றும் தெரியவந்தன.


ஹரியானாவில் உள்ள கோரக்பூரின் பிச்சியா பகுதியைச் சேர்ந்த பிரபல சர்ஜரி ஸ்பெசலிஸ்ட்தான் டாக்டர் தர்மேந்திர பிரதாப்.  ஏற்கனவே திருமணமாகியிருந்த தர்மேந்திர பிரதாப், ராஜேஸ்வரியின் தந்தைக்கு சிகிச்சை அளித்தபோது ராஜேஸ்வரியுடன் நெருக்கமாக பழகியதோடு, அதே பகுதியில் ராஜேஸ்வரிக்கு ஒரு வீட்டையும் பரிசாக வாங்கித்தந்து, ரகசிய திருமணமும் செய்துள்ளார்.

 

ராஜேஸ்வரிக்கு, அதுவே முதல் திருமணம். ஆனால் இந்த விஷயத்தை எப்படியோ அறிந்த தர்மேந்திர பிரதாப்பின் மனைவி, ராஜேஸ்வரியை விட்டுவிடும்படி தர்மேந்திர பிரதாப்பினை வலியுறுத்தியுள்ளார்.  அதற்குள் ராஜேஸ்வரிக்கு இரண்டாம் திருமணம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனினும் அந்த வீட்டை தன் பேருக்கு மாற்றச் சொல்லி, ராஜேஸ்வரி தர்மேந்திர பிரதாப்பை தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த தர்மேந்திர பிரதாப் ராஜேஸ்வரியின் போக்ரா பயணம் அறிந்து நண்பர்களுடன் அங்குச் சென்று ராஜேஸ்வரிக்கு போன் செய்துள்ளார்.


அந்த சமயம் தன் கணவருடன் நேபாளத்தின் போக்ரா குன்றுக்கு வந்திருந்த ராஜேஸ்வரி, தன் கணவர் மணிஷுடன் வேண்டுமென்றே சண்டையிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தர்மேந்திராவை சந்திக்கச் சென்றுள்ளார்.  தர்மேந்திரா தன் நண்பர்களையும் ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு மது ஊற்றிக்கொடுத்து, சொகுசு ஃபிளாட் பற்றி பேசிக்கொண்டே போக்ரா குன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து தனக்கு தொல்லை கொடுத்த ராஜேஸ்வரியை கீழே தள்ளி கொன்றுள்ளார்.

 

பின்னர்  ராஜேஸ்வரியின் பேஸ்புக் கணக்கை மட்டும் 7 மாதங்களாக ராஜேஸ்வரியின் போனில் இருந்தபடி இயக்கி வந்துள்ளார். இதன் மூலமாக, ராஜேஸ்வரி உயிருடனே இருந்ததாக இந்த 7 மாத காலம் அனைவரையும் நம்பவைத்துமுள்ளார். குற்றவாளிகளின் இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், தர்மேந்திராவையும், கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும்  போலீஸார் கைது செய்தனர்.

MURDER, CRIME, HUSBAND, SOCIALMEDIA, DEADPERSON, ALIVE, CHEAT, EXWIFE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS