பெரியாரால் உருவான திராவிடர் கழகம் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பு கொள்கையை மையமாக வைத்து உருவானது.  அதன் பின்னர் அதிலிருந்து கிளைத்த திமுகவினை அறிஞர் அண்ணா தம் திராவிட கொள்கைகளால் வார்த்து எடுத்தார். அண்ணாவுக்கு பிறகு திமுகவின் தலைவரான கருணாநிதி தொடர்ந்து திராவிட கொள்கைகளுள் முக்கியமான கடவுள் மறுப்பு கொள்கையை மையமாக வைத்து பராசக்தி முதலான படங்களுக்கு கதை வசனங்களை எழுதி தம் கொள்கையை வெளிப்படுத்தினார்.

 

எனினும் திமுக ஆட்சியை பிடித்த பிறகு அவரது கதை வசனங்கள் குடிமக்கள் பற்றி பேசுவதில் இருந்து, மீண்டும் அரசாளும் மன்னர் வர்க்கத்தை பற்றி பேசுவதற்காக மெல்ல பின்னோக்கி சென்றது. அதன் பின்னர் அண்மையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கட்சிக் கொள்கைகளுள் முக்கியமாக இருந்த கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் யார் மீது திணிப்பவர்கள் அல்ல, அவர்களின் நம்பிக்கையையும் மதிப்பவர்கள் என இன்று (ஆகஸ்டு 28, 2018) காலை திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் திமுகவின் புதிய தலைவராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு அவரது சகோதரி செல்வி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BY BEHINDWOODS NEWS BUREAU | AUG 28, 2018 5:04 PM #MKSTALIN #DMK #MKARUNANIDHI #DMKLEADER #DMKTHALAIVARSTALIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS