'கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது தேம்பி அழுதவர் விஜயகாந்த்'.. சந்திப்புக்கு பின் ஸ்டாலின்!

Home > தமிழ் news
By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தினை இன்று சந்தித்துள்ளர்.

மிக அண்மையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக, அதிமுக-பாஜக-பாமக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எவ்வித இழுபறியும் இன்றி அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தன.

அதே சமயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவ சிகிச்சை முடிந்து, சிகிச்சை பெற்ற தடம் தெரியாமல், உற்சாகமாய் தமிழகம் வந்திறங்கினார் விஜயகாந்த்.

அவரை அரசியலாளர் திருநாவுக்கரசு முதலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த் தான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பியபோது, தன்னை முதல் ஆளாக வந்து சந்தித்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அதேபோல் மரியாதை நிமித்தமாக, விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வந்த பின்னர் தான்  அவரை சென்று சந்தித்தாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என்று கூறினார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜயகாந்தின் வீட்டுக்கே சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார்.

மேலும் தனது தந்தை கலைஞர் கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் கண்கலங்கியதை தன்னால் மறக்க முடியாது. அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்த் கலைஞரின் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாமல் தேம்பி அழுதார். தமிழகம் வந்ததும் முதல் வேலையாக கலைஞர் சமாதிக்கு சென்றுவிட்டுத்தான் வீட்டுக்கு திரும்பினார். ஆகையால், தான் இங்கு அரசியல் பேசவரவில்லை  என்றும் மனிதாபிமான அடிப்படையில்தான் வந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MKSTALIN, DMK, VIJAYKANTH, DMDK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS