சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழும்புகிறது: மு.க.ஸ்டாலின்!

Home > தமிழ் news
By |

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் இதழின் ஆசிரியர், நக்கீரன் கோபால் மீது 124-வது பிரிவின்கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுவது எனும் பிரிவில் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது இந்த கைது பற்றி கூறிய மு.க.ஸ்டாலின், ‘நக்கீரன் கோபாலின் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது' என்று கூறினார். பின்னர் நக்கீரன் கோபல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 

 

மேலும், ‘பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? - இதனை கடுமையாக கண்டிக்கிறேன். எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோரும் தாங்கள் அவதூறாக பேசிய பேச்சுக்களுக்கு இன்னும் கைது செய்யப்படவில்லையே’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS