சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்க, முதலில்  கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார் டிகேஎஸ் இளங்கோவன்.

 

அதன் பின்னர் கருணாநிதிக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கும், முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கும் மறைந்த ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னானுக்கும் இந்த திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

 

மேலும், நீட் தேர்வு முறை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவிற்கும், கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும், ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கும்  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

 

அதுமட்டுமில்லாமல் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS