'தலைவன் தோனி இல்லாம ஒரு ஆணியும்'.. பிரபல இயக்குநர் காட்டம்!

Home > தமிழ் news
By |
'தலைவன் தோனி இல்லாம ஒரு ஆணியும்'.. பிரபல இயக்குநர் காட்டம்!

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 6 டி20 போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.பிரசாத்,'' தோனி 6 டி 20 போட்டிகளுக்கு இல்லை. அணியில் 2-வது விக்கெட் கீப்பருக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் தோனியின் டி20 வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தமில்லை,'' என தெரிவித்துள்ளார்.

 

தோனியின் இந்த நீக்கத்துக்கு எதிராக ரசிகர்கள்,பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தோனி நீக்கம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,'' இதயம் நொறுங்கியது. தலைவன் தோனி இல்லாமல் ஒரு அணித்தேர்வு குழுவா? உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும் பிசிசிஐ. தலைவன் தோனி இல்லாமல் ஒரு ஆணியைக் கூட உங்களால் புடுங்க முடியாது,'' என தெரிவித்துள்ளார்.

MSDHONI, CRICKET, TWITTER, VIGNESHSHIVN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS