பதவியேற்றார் புதிய தலைமை நீதிபதி.. ’அதிரடி தீர்ப்புகள்’ சொன்ன தீபக் மிஸ்ரா ஓய்வு!

Home > தமிழ் news
By |

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவியேற்றிருப்பவர் ரஞ்சன் கோகாய். அதிரடியாக முக்கிய திருப்பங்கள் நிறைந்த வழக்குகளில் தன் தலைமையில், நவீன தொலைநோக்கு பார்வையில் யோசித்து தீர்ப்பு வழங்கியவர் தீபக் மிஸ்ரா.  

 

கட்டுப்பாடு, அடக்குமுறைகளைத் தாண்டி, அறம் மற்றும் இதயப்பூர்வமான மனிதநேயம்தான் தீர்ப்புகளில் மிளிரவேண்டும் என்று கூறியவர் கடந்த தன்பாலினச் சேர்க்கை தீர்ப்பு, கள்ள உறவு கிரிமினல் குற்றமா என்பது பற்றிய தீர்ப்பு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா என்பதற்கான தீர்ப்பு உள்ளிட்டவைகளை மிக அநாயசமாகச் சொன்னவர்.


ஆனால் அவர் கடந்த வாரத்துடன் ஓய்வு பெற்ற நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளது மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

RANJANGOGOI, SUPREMECOURT, CJI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS