தன்னுடைய மகள் ஜிவா தான் தன்னுடைய மனஅழுத்தத்தை போக்கும் மிகப்பெரிய சக்தி என்று தோனி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம், அவரது மகள் ஜிவாவுக்கு கிடைக்கும் ஊடக கவனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியால் சற்று ஆச்சரியப்பட்ட தோனி அதற்கு பதிலளித்து பேசுகையில், என்னுடைய மன அழுத்தத்தைப் போக்கும் மிகப்பெரிய சக்தி (ஸ்ட்ரெஸ் பஸ்டர்) ஜிவா என பதிலளித்தார்.

 

"எனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, என் மகளுக்குக் கிடைக்கும் அதிக கவனத்தை நான் பார்க்கிறேன். அவளைப் போல ஒருவள் என்னைச் சுற்றி இருப்பது நன்றாக இருக்கிறது. துருதுருவென எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பாள். எதைச் செய்தாலும் மிகக் கவனமாக இருப்பாள். இருப்பினும் அவ்வப்போது அடிபட்டுவிடும். இருந்தாலும் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

 

நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு அழுத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதை போக்க யாராவது ஒருவர் நம்மை சுற்றி இருப்பது ஒரு நல்ல உணர்வை கொடுக்கும். அந்த உணர்வை தான்  ஜிவா எனக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறாள்.

 

நன் எங்கு சென்றாலும் அவள் எங்கே இருக்கிறாள்,என்ன செய்கிறாள் என்று  ஜிவாவை சுற்றியே கேள்விகள் இருக்கின்றது. என்னை பற்றி யாரும் கேட்பதில்லை என நகைச்சுவையாக  கூறினார்.

BY JENO | AUG 9, 2018 1:11 PM #MSDHONI #CRICKET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS