முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்கு பின்பு மு.க அழகிரி அரசியலிலும்,அவரது மகன் தயா அழகிரி ட்விட்டரில் அரசியல் சம்பந்தமான பதிவுகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார்கள்.இந்த நிலையில் மு.க அழகிரி குறித்து சு.சுவாமி தெரிவித்த கருத்துக்கு "மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை" என ட்விட்டரில் தயா அழகிரி பதில் அளித்துள்ளார்.

 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, “திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். மு. க அழகிரியால்  இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும் என கடுமையாக தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் தனது டிவிட்டர் பதிவில்,

 

'அழகிரி இட்லி கடை வைக்கலாம்' என நக்கல் அடித்துள்ளார்  சுப்பிரமணியன் சுவாமி. கி.வீரமணிக்கு எதிராக பொங்கோ பொங்குனு பொங்கிய அழகிரி இதற்கு என்ன சொல்கிறார்? ஆசிரியர் என்றால் பாய்வதும் ஆரியர் என்றால் பம்முவதும் ஏன்? என  கேள்வி எழுப்பி இருந்தார்.

 

ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலளித்த துரை தயாநிதி, மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை , அதுவே காரணம்  என மிகக்கடுமையாக  பதில் அளித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS