தேர்வுக் குழு தலைவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் ‘அதிரடி பேட்ஸ்மேன்கள்’!

Home > News Shots > தமிழ் news
By |

டெல்லி கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவரை தாக்கியவர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக் மற்றும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தங்களது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளரான அமித் பண்டாரி, தற்போது டெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக உள்ளார். வரவிருக்கும் சையத் முஸ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்காக 23 வயதுக்குட்பட்ட டெல்லி அணி வீரர்களின் தேர்வு நடைபெற்றது.

இதற்காக 33 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் அமித் பண்டாரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மைதானத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் அவரை கிரிக்கெட் மட்டை, இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அமித் பண்டாரியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலிஸார் விசாரணை நடத்தியதில் அனுஜ் தேடா என்கிற 23 வயதான இளைஞர் டெல்லி கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாததால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்வம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான தவானும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

SHIKHARDHAWAN, VIRENDERSEHWAG, DDCA

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES