யானை மீதிருந்து சரிந்து விழும் துணை சபாநாயகர்.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
யானை மீதிருந்து சரிந்து விழும் துணை சபாநாயகர்.. வைரல் வீடியோ!

ஒரு வெற்றியைக் கொண்டாடுவதற்கு பொதுவாக ஹிந்துஸ்தானிய மக்கள் யானைகளிலோ, குதிரைகளிலோ ஏறியபடி ஊர்வலம் வருவது வழக்கம். அப்படித்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் துணை சபாநாயகராக  புதிதாக பொறுப்பேற்றுள்ள கிரிபாநாத் மல்லா யானை மீது இருந்து சரிந்து விழுந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அஸ்ஸாம் மாநிலத்திற்குட்பட்ட கரிம்கனி மாகாணத்தின், ரட்டபரி தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன், தான் துணை சபாநாயகராக பொறுப்பேற்றதை கொண்டாடியபடி யானை ஒன்றின் மீது ஒய்யாரமாக வந்துகொண்டிருக்கும்போது, யானையின் அசைவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், சரிந்து விபரீதமாக கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் கீழே விழுந்த துணை சபாநாயகர் எவ்வித சேதமும் இன்றி பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

 

KRIPANATHMALLAH, VIDEO, VIRAL, ASSAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS