'இதுக்கு ஒரு எண்டே இல்லையா'...'வாட்டும் கடும் குளிர்'...என்று முடியும்? தமிழ்நாடு வெதர்மேனின் புதிய அப்டேட்!

Home > தமிழ் news
By |

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் குளிர் வாட்டி வருகிறது.அதிலும் கடந்த சில நாட்களாக மாலை 4 மணிக்கே ஆரம்பிக்கும் குளிர், அடுத்த நாள் பகல் வரை தொடர்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் முதற்கொண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்நிலையில் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், இந்த கடுங்குளிர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனது பதிவில் ''கடும் பனியால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை மிகக் குறைவாக உள்ளது.

 

குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.இது இயல்பைவிட மிகவும் அதிகமாக குளிராகும். சென்னை, பூந்தமல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்ஷியஸாக இன்று காலை இருந்துள்ளது.தமிழக அளவில், மிகவும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, ஓசூரில் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது' மேலும் இந்த குளிரானது வரும் பொங்கல் வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

WEATHER, DENSE FOG, COLD MORNING

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS