கஸ்டமரின் உணவை கள்ளத்தனமாய் சாப்பிடும் டெலிவரி பாய் ..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

சில நேரங்களில் நாம் இணைய வழியே ஆர்டர் செய்யும் உணவில் ஏதேனும் குறைந்துள்ளதாக சந்தேகப்படுவதுண்டு. சில சமயங்களில் நம் சந்தேகம் உண்மையாகக் கூட இருக்கும் என்பதற்கு சான்றாய் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனங்களில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பலரும் பணிபுரிகின்றனர்.  ஏஜென்ஸி போல் செயல்படும்  இந்த நிறுவனங்கள் கஸ்டமர் ஒருவர் உணவை ஆர்டர் செய்த பிறகு, குறிப்பிட்ட உணவகத்துக்கு சென்று அந்த உணவை வாங்கிக்கொண்டு வந்து கஸ்டமரிடம் குறித்த நேரத்துக்குள் டெலிவர் செய்ய வேண்டும்.


இதில் ஒரு பிரபல உணவு டெலிவரி ஏஜென்ஸியின் ஊழியர் ஒருவர் கஸ்டமருக்கு டெலிவரி செய்வதற்காக தான் கொண்டுவந்த ஃபிங்கர் சிப்ஸை, சாப்பிட்டுக்கொண்டே கஸ்டமர் வீட்டின் காலிங் பெல்லை அடிக்கும் வீடியோ பிரபலமாகி வருகிறது. இதுகுறித்த சம்மந்தப்பட்ட நிறுவனம் அக்கறை எடுத்து விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

FOODDELIVERY, UBEREATS, VIRAL, VIDEOS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS