அஸ்ஸாம் கோவிலுக்குள் ஆண்களை அனுமதிக்கக் கோரிய மனு: டெல்லி நீதிமன்றம் பதில்!

Home > தமிழ் news
By |

சில நாட்களுக்கு முன்புவரை சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் பொருட்டு பெரும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பெண்களுக்கான சமவாய்ப்புரிமையை அளிக்கும் வகையில் வெகு காலமாகவே சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு இருந்த தடையை நீக்கி, முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

எனினும் ஒரு பெண் கூட சபரிமலைக்குள் நுழைய முடியாமல் நீடித்த சிக்கலை அடுத்து சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. இந்நிலையில் இதேபோல் அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோவிலுக்குள் ஆண்கள் அனுமதிப்பது தொடர்பான  கோரிக்கையை முன்வைத்து பொதுநல மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும் சர்ச், மசூதி, கோயில்களில் அனைத்து வயதி பெண்களை அனுமதிக்கவும் இதே மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தேவாலயங்களில் மதச்சடங்கு செய்யும் பொறுப்பில் பெண்களை நியமிக்கவும் மனுதாரர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

#SABARIMALAPROTESTS, ASSAM, TEMPLE, SABARIMALA, SUPREMECOURT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS