"மன்னிக்க முடியாத குற்றம்":இந்தியாவிற்கு எதிராக...விளையாட தடை விதிக்கப்பட்ட வீரர்கள்!
Home > தமிழ் newsபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வார்னர் மற்றும் பாங்க்ராஃப்ட் ஆகியோர் மீதான தடையை விலக்க வேண்டும்,என்ற கோரிக்கையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் தலைவர் டேவிட் பீவர் நிராகரித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.அதன் 3வது போட்டியின் 2வது இன்னிங்ஸ் விளையாடிய போது ஆஸ்திரேலியாவின் கேமரூன் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற ஒட்டும் டேப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தும் காட்சிகள் டிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
இந்த சம்பவத்திற்கு வார்னர் மூளையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.மேலும் அதை தடுக்காத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீதும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இதனால் அவர்களுக்கு 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.மற்றொரு வீரரான பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் நிறைய தண்டனை அனுபவித்து விட்டார்கள். அவர்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் தலைவர் டேவிட் பீவர்“அவர்கள் செய்தது சாதாரண தவறு அல்ல.மிகப்பெரிய தவறு. அவர்கள் மீதான தடையை நீக்க முடியாது. அந்த தடை தொடரும். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாரும் வாதிட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.இந்த சுற்று பயணத்தின் போது 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்நிலையில் இந்த தொடரின் போது தான்,தடை விதிக்கப்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேன்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- உலகக்கோப்பை போட்டிகளில் இவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்:விராட் கோலி உறுதி!
- Was Team India playing PUBG at airport? BCCI asks
- "We need to back him till the 2019 World Cup": Virat Kohli about this CSK player
- "ஸ்டெம்பை தெறிக்க விட்ட தோனி"...ஷாக்காகி நின்ற ஜடேஜா!
- MUST- WATCH | MS Dhoni Takes A Mere 0.08 Seconds To Effect Stumping
- அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்பட்ட வீரர்.. கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய துயரம்!
- WATCH | West Indies Bowler Mocks Shikhar Dhawan With 'Thigh-Five' Celebration After Dismissing Him
- 'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!
- 'தலைவன் தோனி இல்லாம ஒரு ஆணியும்'.. பிரபல இயக்குநர் காட்டம்!
- தோனியின் 'டி20 வாழ்க்கை' இத்துடன் முடிந்துவிடவில்லை - ரசிகர்கள் ஆவேசம்!