தமிழ்நாடு அரசு தேர்வாணைய பணிகளுக்கான தேர்வுகள் சீரிய மாத இடைவெளிகளில் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது குரூப்-2 தேர்வுகள். குரூப்-2 தேர்வுகளில் இரண்டு வழிமுறைகளில் தேர்வுகள் நடக்கும். ஒன்று நேர்முகத் தேர்வு, மற்றொன்று நேர்முகத் தேர்வு அல்லாத எழுத்துத் தேர்வு.

 

சார்பதிவாளர் அலுவலர், உதவி வணிகரி அலுவலர் உட்பட மொத்தம் 26 துறைகளில் கட் ஆஃப் மதிப்பெண்களுக்குத் தகுந்தாற்போல் வேலைகளில் அமர்த்தக் கூடிய இந்த தேர்வுக்கு வருடந்தோறும் பலரும் தயாராகி வருகின்றனர். அதில் இந்த வருடம் நடக்கவுள்ள குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணயதளத்தில் (TNPSC) வெளிவிடப்பட்டுள்ளன.


1,199 காலியிடங்கள் உள்ள இந்த குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

BY SIVA SANKAR | AUG 10, 2018 2:38 PM #EXAM #TNPSC #TNPSCEXAMS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS