முக்கிய பொழுதுபோக்கு ஆப் உட்பட 16 ஆப்களில் இருந்து இத்தனை கோடி கணக்குகள் அம்பேல்!
Home > News Shots > தமிழ் newsகடந்த சில நாட்களாகவே பல இணையதளங்களில் தகவல்கள் திருடுபோவதாக பல இணைய பயன்பாட்டாளர்கள் புகார் கொடுத்துவந்தனர்.
இந்த நிலையில், தற்போது 16 வெப்சைட்டுகளில் ஹேக்கர்கள் புகுந்து சுமார் 61.7 கோடி கணக்குகளை நூதனமாக திருடியுள்ள அதிர்ச்சிகரமான உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் பலரின் பொழுதை கழிக்க உதவுவது மட்டுமின்றி பலரின் வாழ்வாதார தேவையாகவும் இணையதள சேவை மாறியுள்ளது. இப்படியாக பல தொழில்முறைகள் நவீனமாக்கப்பட்ட சுழலில், அதற்கு ஈடாக திருட்டு, கொள்ளை போன்ற சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் தொழில்களும் இணையத்தில் அமோகமாக வளர்ந்து வந்துள்ளன.
அதில் குறிப்பாக ஹேக்கிங் எனும் தொழில்நுட்பத்தை பயிலும் பல்வேறு நபர்கள் அந்த படிப்பினை நாச வேலைகள் பலவற்றிற்கும் உபயோகித்து வருகின்றனர். சமீப நாட்களில் டப்ஸ்மாஷ் போன்ற வெப்சைட்டுகள் பிரபலமானதை தொடர்ந்து, பலரும் தங்கள் முகவரி அடையாளத்தை வெப்சைட்டுகளில் பதிவிடுகின்றனர். இப்படி இணையத்தில் தகவல்கள் குவியத் தொடங்கிய நிலையில் பல ஹேக்கர்கள் அதில் பதியப்பட்ட தனிநபர் தகவல்களை நூதனமாக திருடி விற்கத் தொடங்கினர்.
இந்த தனிநபர் டேட்டா பேஸ்களுக்கு கிராக்கி அதிகமானதைத் தொடர்ந்து தற்போது இந்த ஹேக்கர்கள், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட 16 வெப்சைட்டுகளில் உள்ள 61.7 கோடி கணக்கர்களின் பெயர், முகவரி, இமெயில் போன்ற தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், திருடிய தகவல்களை 20 ஆயிரம் பிட் காயின்களுக்கு சட்டவிரோதமான இணையதளங்களிடம் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்திருக்கிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- New dating app introduced for cows!
- நம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்!
- ப்ரஷரில் உள்ள பெண்களுக்கு, ‘ஆண்கள் வாடகைக்கு’.. விநோத ஆப்!
- ’இனிமே டிக்-டாக்கில் இந்த 100 விஷயங்கள பண்ண முடியாது’..கடுமையான புதிய விதிகள்!
- போலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை!
- Dad creates app that locks children's phones if they do not answer parents' calls
- டிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!
- டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்!
- டிக்டொக்: பாடல் வரிக்கு ஏற்ப நடிக்கும்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!
- டேட்டிங் ஆப்’பில் மேட்ச் ஆன பெண்: க்ளிக் பண்ணி உள்நுழைந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!