தசரா: ராவண கொடும்பாவி எரியும்போது புகுந்த ரயில்..50-க்கும் மேற்பட்டோர் மீது மோதி விபத்து!

Home > தமிழ் news
By |

தசரா விழாவை ஒட்டி ராவணனின் கொடும்பாவி எரிப்பு முக்கியமான நிகழ்வாக இந்துக்களால் ஆங்காங்கே நிகழப்பெற்று வருகிறது. பிரதமர் மோடியிம் ஷீர்டியில் வழிபட்ட பின்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவதற்கு முன் ராவண கொடும்பாவியை எரித்தார்.


இந்த நிலையில், பஞ்சாபில் இருக்கும் அமிர்தசரஸ் அருகே, உள்ள சவுரா பஸாரில் இந்தே நிகழ்வு நடைபெற்றது. இதில் உயரமான ராவன கொடும்பாவி எரிந்துகொண்டிருக்கும்போது அவ்வழியே ரயில் ஒன்று புகுந்துவிட்டதால், ரயில் வருவதை எதிர்பார்க்காத, பண்டிகையை காணவந்த பக்தர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்குள்ளாகியதாகவும், சிலர் பலியாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தசரா விழாவை ஒருங்கிணைத்தவர்கள் ரயில் நிலையத்துக்கு முறையான தகவல் அளித்து, கொடும்பாவி எரிக்கும்  தடத்தில் ரயில் வருவதை தடுத்திருந்தால் இவ்வளவு சேதங்கள் இருந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

PANJAB, DASARA, TRAINACCIDENT, RAVANEFFIGY, CHOURABAZAR, AMRITSAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS