3வது மாடியில் இருந்து தவறி விழும் நாய்க்குட்டி.. பதற வைக்கும் வீடியோ!

Home > தமிழ் news
By |
3வது மாடியில் இருந்து தவறி விழும் நாய்க்குட்டி.. பதற வைக்கும் வீடியோ!

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழும் நாய்க்குட்டி ஒன்றை அருகில் இருந்த மக்கள் நீண்ட பெட்ஷீட்  ஒன்றில் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.


வெளிநாட்டில் நிகழும் இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் வலம் வருகிறது. இந்த வீடியோவில் நாய்க்குட்டி ஒன்று மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் பால்கனி கம்பிகளிடையே மாட்டிக்கொண்டதை கீழிருந்து கவனித்த சிலர், ஒரு பெட்ஷீட் போன்ற நீண்ட துணி ஒன்றை நாய் விழப் போவதை அறிந்து அதற்கு நேராக பிடிக்கவும், அந்த நாய்க்குட்டி சிறிது நேரத்தில் அத்தனை உயரத்தில் இருந்து தவறி விழுகிறது.


லாவகமாக நாய்க்குட்டியை கீழே விழவிடாமல், அனைவரும் தாங்கள் வைத்திருந்த துணியை வலை போன்று விரித்துப் பிடித்தபடி, விழும் நாய்க்குட்டியை தாங்கிப்பிடித்துக்கொள்கின்றனர்.

 

VIRAL VIDEO, DOG, PUPPY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS