கரையை கடக்க காத்திருக்கும் டிட்லி புயல்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Home > தமிழ் news
By |

வங்கக் கடலில் உருவாகிய டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச கடலோரம் நகர்ந்து வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒடிசா அரசு வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது.

 

ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து 510 கிலோ மீட்டர் தொலைவில், டிட்லி புயல் நிலை கொண்டுள்ளது. அது வரும் வியாழக் கிழமை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்லி புயலால் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், அந்தந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் மரங்கள், வீடுகள் இடிந்துவிழும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புயல், மிகத் தீவிர மழையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒடிசா அரசு, மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

HEAVYRAIN, KOLKATA, CYCLONE TITLI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS