ஆர்டர் செய்த பிரியாணி பாக்கெட்டை ஆசையுடன் பிரித்த கஸ்டமருக்கு அதிர்ச்சி!

Home > தமிழ் news
By |

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகள் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற்றவையாக இருக்க வேண்டும் என்பதே சப்ளை செய்யும் நிறுவனங்களின் முதல் விதி.  ஆனாலும் சோதனைக் காலங்களைத் தவிர்த்து எல்லா நேரமும் உணவுப் பாதுகாப்பின் மீது அக்கறை செலுத்துவதில்லை பலரும். இந்த நிலையில்தான் இணையதளத்தில் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு பிரியாணியில் இறந்த எலி ஒன்று சேர்ந்து வந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜெர்மனியின் புகழ்பெற்ற லிடில் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் புலவு ரைஸ் எனப்படும் பாக்கெட் பிரியாணியினை ரிச்சர்டு என்பவர் ஆர்டர் செய்திருக்கிறார். வீட்டிற்கு டெலிவர் செய்யப்பட்ட அந்த பிரியாணியை பிரித்து பார்த்த பிறகு ரிச்சர்டு அதிர்ச்சியடைய அவரது மனைவிக்கு கிட்டத்தட்ட வாந்தியே வந்துவிட்டது.


இதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட ரிச்சர்டு, ‘எனக்கான பிரியாணியில் எலி எப்படி வந்தது? என் ஹவுஸில் இப்போது ஒரு இறந்த மவுஸ்’ என பதிவிட்டு இதற்கு பொறுப்பாகிய உணவு நிறுவனத்தை  விமர்சனம் செய்துள்ளார். பலரும் இந்த செய்தியை கண்டு விமர்சிக்கவும், அந்த நிறுவனம் தற்போது பெரும் நெருக்கடியை சந்திப்பதோடு, இதுபற்றி முழுவிசாரணை செய்கிறோம் என்று கூறி, நடந்த தவறுக்கு ரிச்சர்டிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.

LIDIL, ONLINEFOOD, BRIYANI, MOUSEFOUNDINBRIYANI, PULAVRICE, VIRAL, FOODCOMPANY, HEALTH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS