‘சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் ரகசியம்’.. மனம் திறந்த குட்டித் ‘தல’!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும் , தான் இதை எதிர்பார்க்கவில்லை எனவும் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா மனம் திறந்துள்ளார்.

‘சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் ரகசியம்’.. மனம் திறந்த குட்டித் ‘தல’!

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணமாக இந்தியா வரவுள்ளது. இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார். இவருடைய மோசமான ஃபார்மினாலும் அணியில் புதிய வீரர்களின் வரவாலும் சுரேஷ் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இது குறித்து மனம் திறந்த அவர்,‘ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான இந்திய அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்தான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. நான் கடுமையாக உழைத்து, என்னுடைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸை கவனமாக பார்த்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையை இரண்டாவது முறை கையில் ஏந்த யார்தான் விரும்பமாட்டார்கள்’ என சுரெஷ் ரெய்னா பேசியுள்ளார்.

மேலும் சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் ரகசியத்தை சொல்லுங்கள் என்ற கேள்விக்கு,‘என்ன பண்ணுவோம், ட்ரெஸ்ஸிங் ரூமில் இருப்போம்’ என சுரேஷ் ரெய்னா சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.

SURESHRAINA, INDVSAUS, IPL2019, CSK, WORLDCUP2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS