19 மணி நேரம் பசியால் தவித்த சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓடும் ரெயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை(17) ஜம்முவில் இருந்து ராய்ப்பூருக்கு 1500 வீரர்கள் பணி நிமித்தம் காரணமாக ரெயிலில் பயணம் செய்தனர். இரவு 8 மணியளவில் உணவருந்தி விட்டு ரெயிலில் ஏறிய வீரர்களுக்கு மறுநாள் மதியம் வரை உணவு கிடைக்கவில்லை.
பொறுத்துப்பொறுத்து பார்த்த வீரர்கள் ஒருகட்டத்தில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டம் அருகே ரெயிலை நிறுத்தினர். தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த பாத்திரங்களைக் கொண்டு அவர்களே சமைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தாங்களும் உதவி செய்தனர்.ரெயிலை நிறுத்திய வீரர்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் நாங்கள் இங்கேயே சமைச்சு சாப்பிட்டுக் கொள்கிறோம் என கோரிக்கை வைக்க, அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் வீரர்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்தது மிகப்பெரிய அவலம் என, விமர்சனம் செய்து வருகின்றனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Want pizzas in 30 seconds? Visit this culture-rich city
- Man forgets 6-year-old daughter in Mumbai train, cops find her asleep on seat
- PETA India asks McDonald's and KFC to go vegan
- ட்ரெயின் டிக்கெட் கன்பர்ம் ஆகுமா? ஆகாதா?.. புதிய வசதி அறிமுகம்!
- Pallavan Express derails near Trichy
- ஐபிஎல் போட்டியைக் காண கூடுதல் ரயில்கள் இயக்கம்!
- Nurse drugged and thrown off train by lover
- North Chennai to get 10 new metro services
- Van driver abandons children on railway track after seeing approaching train
- South African chef removed from serving Team India, here is why