எதிரியாய் இருந்தாலும் 'நக்சல்' பெண்ணுக்கு ரத்தம் தந்து உயிர்கொடுத்த CRPF வீரர்கள்!
Home > தமிழ் newsஅண்மையில் ஜார்க்கண்ட்டில் நடந்த தாக்குதலின்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்த பெண் நக்சைலைட் ஒருவரின் உயிரினைக் காப்பாற்றும் விதமாக இந்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் செய்துள்ள உதவி நாட்டையே நெகிழவைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் வனப்பகுதியில் நக்சைலட்டுகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தங்களது படைகளுடனும், ஆயுதங்களுடனும் சென்று அந்த வனப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். ஆனால் சிஆர்பிஎப் போலீஸ் படைப்பிரிவினருக்கு முதல் நோக்கமாக பேச்சுவார்த்தையே இருந்துள்ளது. ஆகையால் அங்கிருந்தவர்களை சரணடையச் சொல்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அங்கிருந்த ஹண்டே ஹோன்காஹா என்கிற நக்சைலைட் அமைப்பின் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர், போலீஸாரின் பேச்சுக்கு பணியாமல், சரணடையும் நோக்கமும் இல்லாமல், திடீரென ரிசர்வ் போலிஸ் படையினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு ரிசர்வ் போலீஸ் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிது நேர தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் நக்சைலைட்டுகள் ஓடியுள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீஸார், தங்கள் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு போராடிய பெண் நக்சைலைட் ஒருவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனாலும் அந்த பெண் நக்சைலைட்டுக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில், சிஆர்பிஎப் போலீஸ் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பேர் ரத்த தானம் வழங்கி அந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவியைச் செய்தனர். பின்னர் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக அந்த பெண் அருகில் இருந்த சைபாசா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அண்மையில் நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் போலீஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்திய தேசத்துக்காக பலியாகி பலரையும் உருக்குலைய வைத்தனர். அதே நேரம் தங்கள் மீது தாக்குதல் செய்த நக்சைலைட் பெண் ஒருவருக்கு சிஆர்பிஎப் போலீஸார் ரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ள இந்த சம்பவமும் பலரையும் நெகிழவைத்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'மீண்டும் ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்'...பலியான ராணுவ அதிகாரி...கொந்தளிப்பில் வீரர்கள்!
- "14th Feb was a black day for India": Sania Mirza posts emotional message
- 'மறைந்த ராணுவ வீரர்களுக்கு, நாம் என்ன செய்ய முடியும்?.. இதோ'.. கிரிக்கெட் பிரபலம் அதிரடி!
- ‘யாரும் அழ வேண்டாம், நான் பிறந்ததே நாட்டிற்காக இறக்கத் தான்’.. மனதை உருக்கும் ராணுவ வீரரின் கவிதை!
- 'அம்மா'உங்கள கிட்ட இருந்து பாத்துக்கணும்'...சொல்லிட்டு போனவன் திரும்ப வரவே இல்ல!
- 'வீரர்கள் தான் எனக்கு முக்கியம்'...மகளின் திருமணத்தில்...'வைர வியாபாரியின் நெகிழவைத்த செயல்'!
- "We will not forget": CRPF reacts to Pulwama Terror Attack for the first time
- 'நம்ம நாட்டுல யாராவது தீவிரவாதிகளை ஆதரித்தால்...துப்பாக்கியால் சுடுங்கள்'...இந்திய வீரர் ஆவேசம்!
- Pulwama Terror Attack - India summons Pakistan envoy
- 'அழுதுகொண்டு இருக்க போவதில்லை'...இன்னொரு மகனையும் அனுப்புவேன்...சலுயூட் போடவைத்த தந்தை!