'மருத்துவமனையில் காதல் ஜோடிக்கு நிகழ்ந்த திருமணம்'...காதலின் உறுதியால் சம்மதித்த பெற்றோர்!
Home > தமிழ் newsபெற்றோர் சம்மதிக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள விகாராபாத் நகரை சேர்ந்தவர் முகமது நவாஸ்.இவரும் அதே ஊரை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணும் சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தார்கள்.இவர்களின் காதல் விவகாரம் குறித்து தெரிந்து கொண்ட ரேஷ்மாவின் பெற்றோர்கள்,காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.ரேஷ்மா தொடர்ந்து பெற்றோரிடம் பேசியும் அவர்கள் தங்களின் முடிவில் மிக தீவிரமாக இருந்தார்கள்.இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரேஷ்மா,கடந்த 8 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத ரேஷ்மாவின் பெற்றோர்,அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த முகமது நவாஸ்,மருத்துவர்களிடம் ரேஷ்மா குடித்த பூச்சி மருந்து பாட்டிலை பார்த்துவிட்டு தருவதாக கேட்டிருக்கிறார்.மருத்துவர்களும் எதேச்சையாக பாட்டிலை அவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் திடீரென அதில் மீதமிருந்த பூச்சி மருந்தை முகமது நவாஸ் குடித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் முகமது நவாஸிற்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள்.இதனிடையே இருவரின் காதலின் உறுதியை புரிந்து கொண்ட ரேஷ்மாவின் பெற்றோர்,உடல்நிலை சற்று சரியானதும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.அந்த வகையில் இரண்டு பேருக்கும் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சாட்சியாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
காதலில் உறுதியாக இருந்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட முகமது நவாஸ்,ரேஷ்மா தம்பதியரை மருத்துவமனையில் இருந்த அனைவரும் வாழ்த்தினார்கள்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Two men arrested for trying to sell snakes on social media
- Shocking - Telangana man shot on mouth in the US; Battling for life
- Telangana Election Results 2018 - TRS party leads the race
- Voter arrested for taking selfie in Hyderabad polling booth
- நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட நபர்.. இப்படி ஒரு வேண்டுதல் இதுக்காகத்தான்?
- Telangana politician attempts suicide after raid at house
- Candidate hands out slippers to voters and asks them to hit him
- வாக்காளர்களுக்கு செருப்பும்; கடிதமும் கொடுத்து வாக்கு சேகரித்த விநோத வேட்பாளர்!
- காலையில் 7-ம் வகுப்பு மாணவன்:மாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர்!
- Meet 11-year-old who teaches engineering students!