இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

இந்த நிலையில் நாளை டிரெண்ட் பிரிட்ஜில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், '' நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி கடுமையான ஒன்றாக இருக்கும். வீரர்கள் சட்டை அழுக்காவதற்கும் தயாராக இருக்க வேண்டும். மிகவும் மோசமான கட்டத்தில் இந்திய அணி உள்ளது.

 

இந்த போட்டி பேட்டுக்கும்-பந்துக்குமான போட்டி மட்டுமல்ல, மன உறுதிக்கான போட்டியும் தான்.இந்த நேரத்தில் வீரர்கள் மன உறுதியோடு விளையாட வேண்டும்.எந்த மாதிரி பந்துவீச்சையும் சந்திக்க இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் 2-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப்பை சேர்த்தது தவறான முடிவு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS