‘அடேங்கப்பா..’ சூப்பர் மேனா..? கிரிக்கெட் உலகின் ‘ஸ்டன்னிங் கேட்ச்’.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

தற்போதைய அநேகமான நாடுகளில், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களின் துடிப்பான விளையாட்டும் அவர்களின் மிரளவைக்கும் கேட்ச்சுகளும் நாளுக்கு நாள் வைரல் ஆகின்றன.

அதுவும் டி20 போன்ற போட்டிகளில் ஒவ்வொரு கேட்சும், ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதால், துடிப்பான கிரிக்கெட் வீரர்களின் உற்சாகம் இன்னும் மிரளவைக்கிறது. நம்மூர் ஐபிஎல் போல, பங்களாதேஷில் நடந்துவரும் பிரீமியர் லீக் போட்டியில் ஜேசன் ரோய் பிடித்த அதி அற்புதமான கேட்ச் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருவதோடு, கிரிக்கெட் விரும்பிகளிடையே பெரும் பரவசத்தை உண்டாக்கியுள்ளது.

சிட்டகாங் வைக்கிங் அணிக்கு எதிராக சைல்ஹெட் சிக்ஸர்ஸ் விளையாடிய இந்த போட்டியில் சைல்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்காக அந்த அணி வீரரான ஜேசன் ராய் ராக்கெட் போல் பறந்து காற்றில் மிதந்து மிரளவைக்கும் இந்த கேட்சினை பிடித்துள்ளார்.

விளையாட்டின், 8-வது ஓவரின் 4-வது பந்தை சைல்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அலோக் கபாலி வீசுகிறார். இதனை எதிரணியான சிட்டகாங் வைக்கிங் அணியின் பேட்ஸ் மேன் யாஸிர் அலி உள்வாங்கி, இறங்கி சிக்ஸர் அடிக்கிறார்.

ஏறக்குறைய பவுண்டரிக்கு செல்ல வேண்டிய பந்தை தன் முழுத்திறன் கொண்டு தடுத்து ஜேசன் ராய் பிடித்துள்ள இந்த கேட்ச், கிரிக்கெட் உலகத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருவதோடு, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

JASONROY, BPL, GREATCATCH, STUNNINGCATCH

OTHER NEWS SHOTS