மைதானத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்த இந்திய வீரர்கள்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

Home > தமிழ் news
By |

இந்த வாரம் முழுவதும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் மைதானத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

கோவாவின்  ரஞ்சி கோப்பை  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்தான் 47 வயதான ராஜேஷ் கோட்ஜி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மடக்கான்  கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த போட்டியில்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அருகில் இருந்த இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று அதே ஞாயிற்றுக்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் நவி மும்பை அணி சார்பில், கன்சோலி கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாண்ட 36 வயதான சந்தீப் சந்திரகாந்த் மாத்ரே,  பந்து வீசும்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்,  மரணமடைந்த இந்த வீரர்களின் மரணம் பலரையும் உலுக்கிய நிலையில், அந்த சுவடு மறைவதற்குள், கொல்கத்தாவைச் சேர்ந்த 21 வயதேயான இளம் வீரர் அன்கித் சர்மா கொல்கத்தாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடியபோது திடீரென மயக்கம் வந்தபோது மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார். சக வீரர்களின் முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட இவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கோவா, மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாண்ட மூன்று வீரர்கள், ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மைதானத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் கிரிக்கெட்  உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

CRICKET, INDIA, PLAYER, DEAD, CRICKETGROUND, FOUNDDEAD, CARDIACARREST, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS