HIV-யால் 30 நிமிடத்தில் பணிநீக்கம்: கோர்ட் உத்தரவால் 3 வருஷத்துக்கு பிறகு பெண் மகிழ்ச்சி!

Home > தமிழ் news
By |

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு முன் வேலையை இழந்த பெண்ணை மீண்டும் பணியில் அமர்த்தச் சொல்லி புனே நீதிமன்றம் உத்தரவிட்டு பெண்ணுக்கு நீதி வழங்கியுள்ளதை பலரும் வரவேற்று வருகின்றனர். 

 

2015-ஆம் ஆண்டு புனேவைச் சேர்ந்த தனியார் பார்மஸி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த பெண்ணை மெடிக்கல் உடற்தகுதி விபரங்களை ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறது அந்நிறுவனம். அந்த விபரங்கள் மூலம் நிறுவனமானது, இந்த பெண் ஊழியருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறிந்துள்ளது.

 

இதனால் அந்த பெண்ணை பணியில் இருந்து விலகுமாறும் அந்நிறுவனம் வலியுறுத்தியது. தன் கணவரிடம் இருந்து தனக்கு தொற்றியதாக பெண் கூறியும், அதை ஏற்க மறுத்த நிறுவனம் 30 நிமிடங்களில் அந்த பெண்ணை வேலையை விட்டு தூக்கியுமுள்ளது. 

 

இதனையடுத்து பணியாளர் நல நீதிமன்றத்தில், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், எச்.ஐ.வி தொற்றை காரணமாகச் சொல்லி ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது என்றும், திரும்பவும் இந்த பெண் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியதோடு, 3 வருட காலம் பணிக்குச் செல்ல முடியாததால் கஷ்டத்தில் இருந்த பெண்ணுக்கு, நஷ்ட ஈடாக, இந்த 3 வருடமும் ஊழியருக்கான சம்பளத்தை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

 

5 வருடமாக டிரெய்னீயாக பணிபுரிந்த தன்னை எச்.ஐ.வியியை காரணம் காட்டி பணியில் இருந்து நீக்கிய பின்னர், 3 வருடமாக பணியின்றி தவித்த தனக்கு, இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக  கூறியுள்ளார். 

 

LABOURWELFARE, LABOURCOURT, VERDICT, HUMANRIGHTS, HUMANRESOURCES, HIV, WOMEN, INDIA, PUNE, MAHARASHTRA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS