வாடகை வீடுகளுக்கு பிறகு தொடக்க காலத்தில், வாடகை சைக்கிள்கள் மிகவும் பிரபலம். அதைத்தொடர்ந்து தற்போது யாவும் சுலபத் தவணை மாதத் தவணை போன்ற துறைகளில் பெறப்படுகின்றன. இவற்றை EMI முறையில் பெரும்பாலும் தற்போது நாம் செலுத்துவதுண்டு.

 

ஆனால் நல்லதொரு காஸ்ட்லி மொபைலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். பெரும்பாலும் போன் பேசுவதை தவிர்த்து இணையதள பயன்பாடு உள்ளிட்ட மற்றவற்றிற்குத்தான் காஸ்ட்லி மொபைல்களை பலர் எதிர்பார்க்கின்றனர். குழந்தைகளுக்கு கூட செல்போன்களில் கேம் விளையாடுவது மிகவும் பிடித்தமானதாக மாறி வருகிறது.

 

இந்த சூழலில் பலரும் சாம்சங் டிவி, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன்களை சுலப தவணைகளில் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றையும் வாடகைக்கு விட தொடங்கியிருக்கிறது ரெண்ட்டோமோஜோ என்ற நிறுவனம்.

 

முன்னதாக google pixel 2 நிறுவனம் செல்போன்களை  2099 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. இதேபோல் பல எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விட தயாரான ரெண்ட்டோமோஜோ நிறுவனம் தற்போது i-phone X, samsung s9, apple iphone 8, google home smart speaker போன்ற உயர்தர செல்போன்களை வாடகைக்கு விடுவதற்கு தயாராகி உள்ளது.

 

அதற்கு முன்பணமாக 9998 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கும் ரெண்ட்டோமோஜோ நிறுவனம் தொடக்கத்தில் ஐபோன்களை மட்டுமே மிக அதிக வாடகைக்கு கொடுப்பதாகவும் மற்ற மொபைல்களை குறைவான வாடகைக்கு கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. 

BY SIVA SANKAR | AUG 16, 2018 5:07 PM #TECHIE #SMARTPHONE #MOBILEPHONES4RENT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS