ஒரு தயிர் பாக்கெட் திருட்டை பிடிக்க, கைரேகை டெஸ்ட்.. போலீஸ் செய்த செலவை பாருங்கள்!

Home > தமிழ் news
By |

சீன கலாச்சார பல்கலைக் கழகம் தாய்பெய் நகரில் உள்ளது. இங்கு படிக்கும் பெண் ஒருவர் அந்த ஊர் தயிட் பாக்கெட்டான யோகர்ட் எனும் பண்டத்தை தனது அறையில் வைத்துவிட்டு வெளியே சென்று வந்து திரும்பி பார்க்கும்போது காணாமல் போனதை அடுத்து நண்பர்களை விசாரித்து பார்த்துள்ளார். அதன் பின் துப்பு துலங்காததால், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


போலீசாரும் இதை சீரியஸ் புகாராக எடுத்துக்கொண்டு தயிர் பாக்கெட்டை திருடியவரின் கைரேகை மேட்ச் ஆகிறதா என கண்டுபிடிக்க, அந்த பெண்ணுடன் தங்கியிருந்த மற்ற பெண்களுக்கெல்லாம் மரபணு சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைக்கு ஆன செலவு 98 டாலர். இதனை கணக்கு போட்டால், அதற்கான செலவை ஊர் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே காவல்துறை அமைப்பு எடுத்திருக்க வேண்டும்?  இரண்டு டாலர் தயிர் பாக்கெட்டுக்காக இத்தனை பெரிய செலவு செய்ததற்கு பதிலாக இன்னும் பல தயிர் பாக்கெட்டே வாங்கியிருக்கலாமே என்று பலரும் கோபத்தில் கொதித்துள்ளனர்.


ஆனால் பணம் முக்கியமல்ல, குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்த போலீசார், தயிர் பாக்கெட்டை திருடிய பெண்ணை ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டனர். அது வேறு யாரும் அல்ல. அந்த புகார் அளித்த பெண்ணின் அறையில் தங்கி இருந்த தோழிதானாம்!

CHINA, CRIME, POLICE, INVESTIGATION, VIRAL, BIZARRE, CRAZY, YOGURT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS