மீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது!

Home > தமிழ் news
By |

தடையை மீறி சென்னையில்  ‘பஸ் டே’ கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' என்கிற பெயரில் பேருந்தினை வழிமறித்து அதன் டாப்பில் ஏறி அமர்ந்துகொண்டு செல்வது வாகன போக்குவரத்துகளை இடைஞ்சல் செய்வது, பொதுமக்களை பயமுறுத்துவது என்று கடந்த சில வருடங்களாக செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

முன்னதாக  ‘ரூட்டு தல’ என்கிற பெயரில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் சிலர் பொதுமக்கள் பயணித்த எம்டிசி பேருந்தில் பட்டாக்கத்தியுடன் பயணித்து பலருக்கு தொந்தரவு கொடுத்ததால் போலீஸாரிடம் கடுமையாக வசைபட்டதோடு பெற்றோரிடம் அடி, உதையும் வாங்கினர்.  அதன்பின்னர், இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, 'பஸ் டே'வுக்கு தடை இருப்பதை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தி, கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது தமிழக காவல்துறை.  

ஆனால் அதன் பிறகும்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் சிலர் மாநிலக் கல்லூரிக்குச் செல்லும் தடம் எண் 6D, 57F, 21G பேருந்துகளின் ரூஃப் டாப்பில் ஏறி, கத்தி சுற்றுவது, கூச்சலிடுவது, நின்றுகொண்டு கெத்து காட்டுவது என்று ரகளை செய்துள்ளது சென்னையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் சுமார் நந்தனம், மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 50 பேர் ஏறக்குறைய 15 கத்திகள், ஒரு கோடாரி ஆகியவற்றுடன் சிக்கினர்.

இவற்றை எல்லாம் சாலைகளில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் தத்தம் செல்போன்களில் படம் பிடித்து வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவங்கள் வைரலாகின. இவற்றை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரித்ததில் சுமார் 6 பேரை கைது செய்தும் பலரை எச்சரிக்கை செய்துமுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

COLLEGESTUDENTS, CHENNAI, BUS, BUSDAY, POLICE, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS